ஒரு ஊரில் ஜென் மாஸ்டர் தன் சீடர்களோடு
மடத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது ஒருவர் மாஸ்டரை பார்க்க வந்தார். அவர்
மாஸ்டரிடம் "குரு, நான் உங்கள் சீடனைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை
சொல்வதற்காக வந்துள்ளளேன்" என்று கூறினார். அதற்கு அந்த குரு அவரிடம்,
"முதலில் நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு பதிலளியுங்கள்" என்று
கூறினார்.
அவரும் "சரி!" என்று கூறினார். அப்போது குரு அவரிடம் முதல் கேள்வியாக
"நீங்கள் சொல்லும் விஷயம் உங்களுக்கு முன்பு நடந்ததா?" என்று கேட்டார்.
அதற்கு அவர் "இல்லை" என்று கூறினார்.
பின் இரண்டாவது கேள்வியாக "இப்போது சொல்லப் போகும் விஷயம் நல்லதா?
கெட்டதா?" என்று கேட்டார். அவர் "கெட்டது" என்று
பதிலளித்தார்.
மூன்றாவதாக அவரிடம் "நீங்கள் சொல்லும் விஷயத்தை கேட்பதால், எனக்கு லாபமா?
நஷ்டமா?" என்று வினாவினார். "அப்படி எதுவுமே இல்லை குருவே"
என்றார்.
பின் குரு அவரிடம் "நீங்கள் சொல்லும் விஷயம் உண்மையா பொய்யா என்பதும்
தெரியாது, கேட்காமல் நான் இருந்தால், எனக்கு எந்த நஷ்டமும் இல்லை, சொல்லப் போகும் விஷயம்
வேறு கெட்டது, பின் எதற்கு நான் கேட்க வேண்டும்" என்று கேட்டு, வந்தவரை
திருப்பி அனுப்பிவிட்டார்.
No comments:
Post a Comment