Thursday, 20 September 2012

இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ

குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும்.

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும்.உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர்.

குங்குமப்பூ தரும் அழகு 

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ

இதயம் மற்றும் மூளைக்கு சக்திதர குங்குமப்பூ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மைக் குறைவைப் போக்க மற்ற மருந்துகளில் கலந்து பயன்படுத்துவார்கள்.

இதன் நாரினை ஆண்களின் சிறுநீர்க்குழாயில் வைத்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். இதனால் விந்துக் குறைவு நிவர்த்தியடையும். தடைப்பட்ட சிறுநீர் மற்றும் மாதவிலக்கைப் பிரியச் செய்யும். இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்குச் சக்தி தரும். மலச்சிக்கலை உண்டாக்கும் கட்டி, வீக்கங்களைக் கரைக்கும்.

Wednesday, 19 September 2012

தோல் தொற்று நோய்களை காண மூலிகை மருத்துவம்

*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும். 

*அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும். 

*எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும். 

*எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும். 

*எலுமிச்சம்பழச் சாற்றில் லவங்கப் பொடியைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும். 

*நல்லெண்ணெய்யை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் விரைவில் மறையும். 

*குப்பை மேனி கீரையை பொடி செய்து தினமும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் இளமையில் ஏற்படும் தோல் சுருக்கத்தை தவிர்க்கலாம். 

*கொத்தமல்லியை அரைத்து 2 நாள்களுக்கு ஒரு முறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். 

*சோற்றுக் கற்றாழையின் சாறை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து தோல் மென்மை அடையும்.

*முகத்தில் தேவையற்ற முடிவளர்வதைத் தடுக்க கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்திக் குளிக்கலாம். 

Tuesday, 18 September 2012

தூக்கத்திற்கு ரோஜாப்பூ, மணலிக் கீரை

வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித் தால் நன்றாக தூக்கம் வரும். ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்னை தீரும்.

முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும். மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் தூக்கம் வரும். மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும்.

மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத் தில் தினமும் 2கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக  தூக்கம் வரும்.

மணலிக் கீரையை உலர் த்திப் பொடியாக்கி தின மும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் டென்ஷன் குறைந்து நல்ல தூக்கம் வரும்.

20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

வெண்டைக்காய்

* வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோர நாடுகள் வழியாக இந்தியாவில் நுழைந்தது.

* முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

* சில இடங்களில் வெண்டைக்காய் விதையை காபி பொடியில் பயன்படுத்துகிறார்கள்.

* வெண்டைக்காயில் உள்ள நார்ப்பொருள்களால் கொழுப்பு கரையும்; மலச்சிக்கல் நீங்கும்.

* அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோள மாவில் புரட்டி, பொரித்து சாப்பிடுகிறார்கள்.

* வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.

* பிஞ்சுக் காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* வெண்டைப் பிஞ்சுடன் சர்க்கரை சேர்த்து, சாறு போல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் தணியும்.

*  குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.

Monday, 17 September 2012

தேர்வு பயம்:ஆலோசனை

தேர்வு பயத்தால் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் நடத்தை மாற்றம் மற்றும் மனச்சிக்கல் உண்டாகிறது. எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சத்தான உணவையும் மாணவர்கள் தவிர்க்கின்றனர். சத்துக் குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகிறது. எண்ணெய்யில் பொரித்த கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். 

காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் மற்றும் தாது சத்து அதிகம் உள்ள உணவுகளால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். காபியில் உள்ள காபின் என்ற பொருள் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்.  எனவே காபியை தவிர்க்கலாம். சுண்டல் வகைகள் மற்றும் முளைக்கட்டிய பயறு வகைகள் சாப்பிடலாம். தண்டுக் கீரையை சாப்பிடுவதன் மூலம் போலிக் ஆசிட் கிடைக்கிறது. 

இதனால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் படிக்க முடியும். ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். இதில் இரும்பு, ஜிங்க் மற்றும் பி வைட்டமின் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். சுண்டக்காய்ச்சிய பாலில் புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வைட்டமின் பி-2 மற்றும் பி-12 சத்து கிடைக்கிறது. 

பாலாடைக்கட்டி மற்றும் பாதாம் ஆகியவற்றில் இருந்து பி-2 வைட்டமின், வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஜிங்க் ஆகிய சத்துகள் கிடைக்கிறது. செர்ரிபழம் சாப்பிடும் போது மனதுக்கு உற்சாகம் கிடைக்கிறது. எனவே மனச்சோர்வை நீக்கும் சத்தான உணவுகள் மூலம் தேர்வு பயத்தை விரட்ட முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. 

கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் 10 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்தசோகைகுணமாகும். சிறு கீரையுடன் மிளகுத்தூள், உப்பு போட்டு சமைத்து நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். செலரிக் கீரையுடன் திப்பிலி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். 

தக்காளி, உருளைக் கிழங்கு, வெண்டைக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றை தின மும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும். 
திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் மறதி குறையும். 

புளியாரை கீரையுடன் வேப்பந்துளிர், மிளகு 3, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மை அடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொன்னாவரைக் கீரையின் விதையை அரைத்து சாப்பிட்டு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் உடல் அசதி மறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

தமிழை காத்தளித்த "தமிழ்த்தாத்தா' உ.வே.சா., வீட்டை காப்பாற்ற முடியாத அவலம்

மறைந்து கொண்டிருந்த தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை எல்லாம் தேடித் தேடிக் கண்டுபிடித்து காப்பாற்றிய, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் வீட்டைக் கூட, காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டு, தமிழ் ஆர்வலர்கள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழைக்காத்தவர்:


தமிழ்த் தாத்தா என்று போற்றப்படுபவர் உ.வே.சாமிநாத அய்யர். தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாக இருந்து, செல் அரித்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த காலத்தில், அலைந்து திரிந்து, கடின உழைப்பால் தேடி எடுத்து, சுவடிகளில் இருந்ததை, தாள்களில் அச்சாக்கி, நூல்களாக பதிப்பித்த பெருமைக்குரியவர்.சிலப்பதிகாரத்தை முதன் முதலில் உரையுடன் பதிப்பித்தார். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகையை பதிப்பித்தார். அவர் கண்டெடுக்காவிட்டால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களே நம் பார்வைக்கு வராமல் போயிருக்கும். இந்த உழைப்புக்காகத் தான் அவர், தமிழ்த் தாத்தா என்று போற்றப்படுகிறார்.
"தியாகராச விலாசம்':
 

தற்போது அவர் வாழ்ந்த,சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தை இடிக்கும் செயல் அரங்கேறியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரன்பேட்டையில், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் வாழ்ந்த, "தியாகராச விலாசம்' இல்லம் உள்ளது. உ.வே.சாமிநாத அய்யருக்கு, சென்னை மாநிலக் கல்லூரியில், 1903ம் ஆண்டில், தமிழாசிரியர் பணி கிடைத்ததையடுத்து, 1904ல், இந்த வீட்டில், 20 ரூபாய் வாடகைக்கு குடியேறினார். வீட்டு உரிமையாளர், வீட்டை இவரிடமே விற்க விருப்பம் தெரிவித்ததால், வீட்டை அவர் வாங்கினார்.அந்த இல்லத்துக்கு, கும்பகோணம் கலைக் கல்லூரி ஆசிரியராக இருந்த, அவரது குரு தியாகராச செட்டியாரின் பெயரைச் சூட்டினார். 1919 வரை, மாநிலக் கல்லூரியில் பணியாற்றி, பின் மீனாட்சி தமிழ்க் கல்லூரியில், 1924 முதல் 1927 வரை, முதல்வராக இருந்தார். 1942ல், இரண்டாவது உலகப் போரின் போது, சென்னை மக்களோடு, அவரும் இடம்பெயர்ந்தார். அதன்பின், திருக்கழுக்குன்றத்தில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான வீட்டில், நிரந்தரமாகத் தங்கினார். 1942, ஏப்., 28ம் தேதி மறைந்தார். அவரது திருவல்லிக்கேணி வீடு, உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.
என்ன நடந்தது?
 

வீட்டைப் பராமரித்தோர், விற்பனை செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டை வாங்கியவர், அதை இடித்து, புதிதாக கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக, வீட்டை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த தகவல் வெளிவந்ததால், இடிப்பு பணி நேற்று நிறுத்தப்பட்டிருந்தது.திருவல்லிக்கேணி வீட்டிற்கு நேற்று சென்றபோது, இடிப்புப் பணியில் இருந்தவர்கள் வெளியே நின்றிருந்தனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டிற்குள் செல்ல, ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். அங்கிருந்த ஊழியர்கள், ""திடீரென அரசு அதிகாரிகள் வந்து, வீட்டை இடிக்கக் கூடாது என, தடை போட்டு விட்டனர். இதுவரை இடித்ததற்காக, 30 ஆயிரம் ரூபாயை யார் தருவர்; நீங்கள் தருவீர்களா?,'' என்று கோபத்துடன் கேட்டனர்.பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து பாதுகாத்த தமிழ்த் தாத்தா, உ.வே.சா., வாழ்ந்த இல்லத்தை, தமிழக அரசு மீட்டு, நினைவகமாக மாற்ற வேண்டும் என்பதே, தமிழ் ஆர்வலர்களின் விருப்பம். அது, உ.வே.சா.,வின் அரிய செயல்களை, வருங்கால சந்ததியினரின் நினைவுக்கு கொண்டு செல்லும் வகையில் அமையும்.
உ.வே.சா.,வின் வீட்டை அழியா சின்னமாக்க வேண்டும்:
 

தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வின் இல்லத்தை மீட்டு, உயிர்ப்பித்து அழியாச் சின்னமாக, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டுமென்று, தமிழ் ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பாரதியார் இல்லத்தின் வடிவமைப்பை மாற்றிய பின், அரசு வாங்கி சீரமைத்தது போல் அல்லாமல், இந்த இல்லத்தின் வடிமைப்பை மாற்றாமல், அப்படியே காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழறிஞர்கள் கூறியதாவது:
 

சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் - திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்: திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழ் பயின்றவரும், தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிப் பதிப்பித்து, தமிழ் அன்னைக்கு புகழ் சேர்த்தவருமான தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வின் இல்லம், இடிபடுவதில் இருந்து தமிழக அரசு காக்க வேண்டும். அதை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும்.

முத்துக்குமாரசாமி தம்பிரான் - திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர்: உ.வே.சா., வாழ்ந்த வீட்டை அரசு வாங்கி, அவரது பெயரில் அங்கு நினைவகம் அமைக்க வேண்டும். இது, தமிழுக்குச் செய்யும் பெரிய தொண்டாக இருக்கும்.

குமாரசாமி தம்பிரான் - மவுன மடம், திருச்சி: 
தமிழ்த் தாத்தா, பழமை மாறாமல் இலக்கியங்களைப் பதிப்பித்தது போல, அரசும் இல்லத்தைப் பராமரிக்க வேண்டும்.
பேராசிரியர் க.ப.அறவாணன் - தஞ்சை பல்கலை முன்னாள் துணை வேந்தர்: ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பயணம் செய்தோர் ஒன்றைக் கண்டிருக்க முடியும். அந்தந்த நாட்டு சான்றோர்களை, அவர்கள் போற்றும் முறை, அதிசயக்கத்தக்கது. அறிஞர்களின் இல்லங்கள், வாழ்ந்த இடங்கள் அனைத்தும் மிகக் கவனமாக பாதுகாக்கப்பட்டு, சுற்றுலா வருவோர் நேரில் பார்த்து, வாழ்வியலை படிக்கும் வகையில் விவரங்களை எழுதி வைத்துக் கொண்டாடுகின்றனர். இச்சூழலில், தமிழுக்கு உயிர் கொடுத்த, தமிழ்த் தாத்தா உ.வே.,சா.,வின் இல்லத்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது, வருத்தத்துக்குரியது. அது மீண்டும் பழைய உருவிலேயே உயிர்ப்பிக்கப்பட்டு, மக்களின் பொதுச் சொத்தாக்க வேண்டியது, அரசின் தலையாய கடமை.


பேராசிரியர் ரவீந்திரன் - சென்னை பல்கலை இதழியல் துறை தலைவர்: தமிழகத்தின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான, சங்க இலக்கியங்களை மீட்டெடுத்தவர் உ.வே.சா. அவரது வீடு இடிக்கப்படுவது வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இதை அரசும், மக்களும் தடுத்து நிறுத்தி, வீட்டை கையகப்படுத்தி, அழியாச் சின்னமாக உடனடியாக உருவாக்க வேண்டும்.
கவிக்கோ ஞானச்செல்வன்: தமிழுக்கு ஒரு விளக்கமாகத் திகழ்ந்த, தமிழ் நூல்களை தேடித் தேடி ஆய்ந்து கொடுத்த, தமிழ்த் தாத்தா உ.வே.சா., வாழ்ந்த இல்லம், புனிதமான கோவில். அதை இடிப்பதோ, சிதைப்பதோ நாகரிகமற்ற, பண்பில்லாத செயல் என, கருதப்படும். அதற்கு எந்த ஊறும் செய்யாது பாதுகாக்க வேண்டியது, தமிழக அரசின், தமிழர்களின் இன்றியமையாத கடமை.

பேராசிரியர் ராமலிங்கம் - சென்னை பல்கலை தமிழ் மொழித்துறை: தமிழ்த் தாத்தா இல்லத்தைக் காப்பாற்றுவது, தமிழைக் காப்பாற்றுவதற்கு ஒப்பானது. பாரதியார் இல்லத்தை இடித்து, வடிவமைப்பை மாற்றிய பின் மீட்டது போல் அல்லாமல், உ.வே.சா., இல்லத்தின் வடிவமைப்பை மாற்றுவதற்குள், மீட்டு, காப்பாற்ற வேண்டும்.

டாக்டர் சுந்தரமூர்த்தி - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர்: தமிழ்த் தாத்தா பிறந்த ஊரில் உள்ள அவரது இல்லத்தை, அரசு நினைவு இல்லமாக மாற்றியுள்ளது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தையும் அரசு போற்றி பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்வது, தமிழுக்குச் செய்யும் தொண்டு.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்: தமிழாய்ந்த தலைமகன் வாழ்ந்த அந்த இடத்தை, அரசு முதலிலேயே கண்டுபிடித்து, மக்கள் உணரும்படி செய்திருக்க வேண்டும். இப்போது பாதி இடிந்த நிலையிலுமாவது, அந்த இல்லத்தை அரசு உடனடியாக வாங்க வேண்டும்.தமிழ்த் தாத்தா வாழ்ந்த இல்லத்தை வெளிநாட்டவரும் பார்வையிட, தலை நகரில் நினைவு இல்லம் இருக்க வேண்டியது அவசியம்.

ம.ராசேந்திரன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: 
இன்றைய முதல்வர் தான், கும்பகோணம் அருகில் இருக்கிற உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வுக்கு நினைவு இல்லம் எழுப்ப, அரசாணை வெளியிட்டார். உ.வே.சா., தனது இளமைக் காலத்தை உத்தமதானபுரத்தில் அதிகம் செலவிட்டு இருந்தாலும், அவர் நந்தனம் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், திருவல்லிக்கேணி வீட்டில் தான், அதிகம் தமிழ் வளர்க்க அருந்தொண்டு ஆற்றினார். தமிழ்த் தாத்தா வாழ்ந்த தமிழ்க் கோவிலை வாங்கி, தலைநகரில் நினைவு இல்லம் அமைத்திட வேண்டும்.

பத்மாவதி விவேகானந்தன் - ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியை: இந்தியர்களுக்கு வரலாற்றைப் பாதுகாக்கும் உணர்வு குறைந்து போயிற்று என்ற குற்றச்சாட்டு, நம் மீது வைக்கப்படுவதுண்டு. அதனால் தான், திருவள்ளுவர் எங்கு பிறந்தார் எனக் கேட்டால், மயிலாப்பூர், மதுரை, நாகர்கோவில் என்கிறோம். ஷேக்ஸ்பியர் எழுதிய எழுதுகோல், அவர் நாட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில், மகாகவி வாழ்ந்த குயில் தோப்பை பறிகொடுத்து விட்டோம். அதுபோல், காடு, மேடுகளெல்லாம் அலைந்து திரிந்து, கறையான்களின் காதுகளுக்கு தகவல் சென்றுவிட்ட போதிலும், ஓலைச்சுவடிகளை எடுத்து வந்து, இலக்கண அறிவு கொண்டு, தமிழ்த் தாத்தா தொகுத்து தந்து விட்டுப் போனதால் தான், இன்றைக்கு தமிழ் மொழியை செம்மொழி என்கிறோம். தமிழ் வளர்த்த கோவிலை இடித்து விடாதீர்கள். அரசு முனைப்பு கொண்டு, அந்த இடத்தை வாங்கி, நினைவு இல்லமாக்க வேண்டும்.இவ்வாறு தமிழறிஞர்கள் தெரிவித்தனர்.
தாகூர் வந்த இல்லம்:
 

அவ்வை நடராஜன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: கும்பகோணத்திற்கு அருகே உள்ள உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கு நினைவு இல்லம் இருந்தாலும், நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்த் தொண்டு ஆற்றிய காலத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டீஸ்வரன்பேட்டையில், 20 ரூபாய் வாடகையில், குடும்பத்தோடு வசித்தார் என, பதிவுகள் கூறுகின்றன. அந்த இல்லத்திற்கு மகா கவி ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார். மகா கவி பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் நினைவு இல்லம் இருந்தாலும், தலைநகர் சென்னையில், அவர் மூச்சுக்காற்று உலவிய இல்லத்தை நினைவு இல்லமாக பேணிக் காத்து வருகிறோம். அதுபோல், உ.வே.சா., கால்தடம் பதித்த திருவல்லிக்கேணி இல்லத்தை நினைவு இல்லமாக்கி, அங்கொரு அரங்கம் அமைத்து, தமிழ் ஆய்வு அரங்கங்கள் நடக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.

ஒட்டகச்சிவிங்கி

ஒட்டகச்சிவிங்கியின் பின்கால்கள்தான் அதனுடைய தற்காப்பு ஆகும். ஆபத்துக் காலத்தில் அந்தக் கால்கள் மூலம் ஓர் உதைவிட்டால் அந்த உதை ஒரு சிங்கத்தைக் கூட வெல்லும் வலிமையுடையதாகும். ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் கிடைக்காத சமயத்தில் புல்லின் மீதுள்ள பனித்துளி, இலைகள் மீது படர்ந்துள்ள பனித்துளி ஆகியவற்றை உட்கொள்ளும். ஒட்டகச்சிவிங்கி தன் நீண்ட கால்களை அகலமாக வைத்து கழுத்தை தரைக்குக் கொண்டு வந்து தண்ணீர் பருகும். ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு 40-50 செ.மீ. நீளம் இருக்கும். கருப்பு, நீலம், பர்பிள், பிங்க் ஆகிய வர்ணங்கள் ஒட்டகச்சிவிங்கியின் நாக்கில் இருக்கும்.