Monday, 27 August 2012

புதினாவின் பயன்கள்..


*  புதினாக்கீரை வாசனை மிகுந்த சத்துக்கள் நிறைந்த கீரையும் ஆகும்.

*  உயிர்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஏராளமாக புதினாக் கீரையில் இருக்கிறது.

*புதினாக் கீரையைச் சட்னி செய்து சாப்பிட்டால்தான் முழுப்பயனையும் பெறலாம்.

*  ரத்தத்தைச் சுத்தி செய்வதில் மிகச் சக்தி வாய்ந்த கீரை இது.

*  ருசியை ஏற்படுத்திப் பசியை அதிகமாக்கும். வாந்தி பேதி ஆகியவற்றை உடனே நிறுத்தும். அக்னி மந்தத்தைக் குணமாக்கும்.

*  வயிற்றுக்கும் குடலுக்கும் வலிமை தருவதில் நிகரற்றத் தன்மை வாய்ந்த கீரை இது.

*  புதினாக் கீரையில் இருந்து மென்தால் எனும் ஒருவிதச் சத்தை எடுக்கிறார்கள். இந்த உப்பு பல்வேறு மருத்துவ உபயோகங்களுக்குப் பயன்படுகிறது.

Thursday, 23 August 2012

3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!


தூத்துக்குடி அருகே, பாண்டிய மன்னர் காலத்தில் துறைமுக பட்டணமாக திகழ்ந்த கொற்கை கிராமத்தில், 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், கொற்கை உள்ளிட்ட கிராமங்கள், துறைமுக பட்டணமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முத்து, சிப்பி, பவளம் உள்ளிட்ட பொருட்களும், மற்ற அத்தியாவசிய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதுபோல, இறக்குமதியும் நடந்தது. காலப்போக்கில், கொற்கை துறைமுகம் அழிந்து போனது. இந்நிலையில், பெங்களூரில் மத்திய அரசின் தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் அறவாழி, சில நாட்களுக்கு முன், சொந்த மாவட்டமான தூத்துக்குடி வந்தார். அவர், கொற்கையில், பொக்லைன் இயந்திரத்தால் தோண்டப்பட்ட குளத்தில், ஆய்வு மேற்கொண்டார். அங்கு, முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.


அறவாழி கூறியதாவது: இந்த குளத்தின் மேற்பரப்பில் களிமண்ணும், அதனடியில் சாதாரண மண்ணும், அதற்கடியில் கடற்கரை மண்ணும் உள்ளன. இதன்மூலம், இங்கிருந்த கடற்பரப்பில் முன்னோர்கள் வாழ்ந்தது தெரிய வருகிறது. காலப்போக்கில் அதற்கு மேல் மண், களிமண் படிந்தது. நடு அடுக்கிலுள்ள சாதாரண மண்ணில், இறந்த முன்னோர்களின் உடலை மண் பானைகளில் போட்டு புதைத்த, முதுமக்கள் தாழிகள் உள்ளன. சராசரியாக, நான்கு அடி உயரத்தில், 25க்கும் மேற்பட்ட தாழிகள், சிதிலமடைந்த நிலையில், இங்கு காணப்படுகின்றன. 

அதிலுள்ள மனித உடல்களின் எலும்புத் துண்டுகளை வைத்து பார்க்கும்போது, இவை, 2,500 முதல் 3,000 ஆண்டிற்கு முந்தையது என கணிக்கப்படுகிறது. எனினும், தொல்லியல் துறை நிபுணர்கள் மூலம், இங்கு மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டால், இங்கிருந்த முன்னோர்களின் வாழ்க்கை முறை, முதுமக்கள் தாழி போன்ற பல்வேறு அரிய பொருட்கள், தகவல்கள் துல்லியமாக தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, மிகப் பழமையான கண்ணகி கோவில் இங்குள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் முன்னோர்களின் முதுமக்கள் தாழிகள், தொல்லியல் துறை மூலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, கொற்கையிலும் முதுமக்கள் தாழிகளை முழுமையாக கண்டறிந்து, வேலியிட்டு பாதுகாத்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென, வரலாற்று ஆய்வாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, மணல் கொள்ளைக்காகவும், புதையல் இருப்பதாக கிளப்பி விடப்பட்ட வதந்தி காரணமாகவும், இக்குளம் பொக்லைன் இயந்திரம் மூலம் தொடர்ந்து தோண்டப்பட்டு, மணல் எடுக்கப்படுகிறது.

இறைவழிபாட்டில் தேங்காய் & வாழைப்பழம் ஏன் தெரியுமா?

இறைவழிபாட்டில் தேங்காய் மற்றும் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிப்பது ஏன் தெரியுமா?

வாழைப்பழம், தேங்காய்  ஆகிய இரண்டுமே நம்முடைய எச்சில் படாதவை ஆகும். முக்கனிகளான மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றில் வாழைப்பழத்தை தவிர மற்ற பழங்களை சாப்பிட்டுவிட்டு கொட்டையை ஊன்றினால் முளைக்கும்.ஆனால் வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியில்லாத நிலையான முக்தியை குறிக்கிறது. இறைவனிடம் நமக்கு மீண்டும் பிறவாத நிலைவேண்டும் என்பதை உணர்த்தவே இப்படி வாழைப்பழம் படைக்கப்படுகிறது.

வாழைக்கன்று மரமாகி, அந்த மரத்திலிருந்து வாழைப்பழம் கிடைக்கிறது. அதே போலத்தான் தேங்காயும், தேங்காயை சாப்பிட்டுவிட்டு தேங்காய் ஓட்டை போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னை மரம் முளைக்கும். இப்படி எச்சில் படாத, மீதமாகாத பொருளான வாழைப்பழம், தேங்காயை இறைவனுக்கு படைத்து அவனது அருளைப்பெறும்படி முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.

பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. 

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

Wednesday, 22 August 2012

உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா?

உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா? கவலையை விடுங்க... இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.


ஆகவே இதற்காக அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு, ஜிம் சென்று உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும். இப்போது அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று பாருங்களேன்...


பச்சை மிளகாய் சாப்பிடுங்க!!! உடல் எடை குறையும்!!!

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.


மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.

எடை குறைய பூண்டை சாப்பிடுங்க!!!

இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.


ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும். ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுகு எண்ணெயும் உடல் எடையை குறைக்குமாம்!!!

சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்.


அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.

மோர் அதிகம் சாப்பிட பிடிக்குமா? ஈஸியா எடை குறைக்கலாம்...

பொதுவாக பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.


மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்.

உடல் பருமன் குறைய கறிவேப்பிலை சிறந்ததாம்!!!

அனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால் இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.


வேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.

Monday, 20 August 2012

பூ...பூ...வாழைப்பூ

* வாழைப்பூ சற்று துவர்ப்பாயிருக்கும். அதுவே உடலுக்கு ஏற்றது. துவர்ப்பு பிடிக்காதவர்கள் வாழைப்பூவை பொடியாக அரிந்து சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவும் நீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் துவர்ப்பு நீராக இறங்கிவிடும்.

* வாழைப்பூவை நறுக்கிச் சாறு எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் ரத்த மூலம் போக்கும். கை,கால் எரிச்சல் நீங்கும்.

* வாழைப்பூ கறி பித்தம், வாதம், உடலில் ரத்தக் குறைவு, வயிற்றில் பூச்சி முதலிய வியாதிகளுக்கு சஞ்சீவி போன்றது.

* வாழைப்பூவிலுள்ள காளானையும், கண்ணாடித் தோலையும் அகற்றிவிட்டு அரிந்து பருப்புச் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது வயிற்றுக் கோளாறைப் போக்கும்.

* அரைத்த உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்புடன் கலந்து வடையாகச் செய்து சாப்பிட்டால் சுவைக்கு சுவை, உடலுக்கு ஏற்றது.

Saturday, 18 August 2012

உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை சாப்பிடுங்க!!!

உடல் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவில் புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் எவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது என்பதை எளிதில் சொல்லி விட முடியும். ஏனெனில் அசைவ உணவுகளான ஆட்டுக் கறி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றை உண்டாலே உடலுக்குத் தேவையான அளவு புரோட்டீன் கிடைத்துவிடும். ஆனால் அதுவே சைவ உணவுகளில் சொல்லச் சொன்னால் மிகவும் கடினம். ஏனென்றால் அத்தகைய சைவ உணவுகளில் நிறையவே புரோட்டீன்கள் உள்ளன.


அதிலும் புரோட்டீன் இருக்கும் உணவுகளை அதிகம் உண்டால் தான், உடலில் புதிய செல்கள் உருவாவதோடு, திசுக்களும் நன்றாக பராமரிக்கப்படும். ஆகவே எதை சாப்பிட்டாலும் அதில் புரோட்டீன் இருக்கிறதா என்பதைப் பார்த்து, ஒரு நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும். அவ்வாறு உடலுக்கு தேவையான புரோட்டீன்களை எந்த உணவை சாப்பிட்டால் எளிதில் கிடைக்கும் என்பதை படித்துத் தெரிந்துகொண்டு, அதனை தினமும் தங்கள் உணவில் சேர்த்து பின்பற்றி வந்தால், உடல் எடை குறைவதோடு, உடல் மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

உணவுகளில் சேர்க்கும் பருப்புகள் மற்றும் பீன்ஸ்களிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அதில் ஒரு கப் பருப்பில் 17 கிராம் புரோட்டீனும், ஒரு கப் பீன்ஸில் 16 கிராமும் இருக்கிறது. பெரும்பாலான இந்திய மக்கள், இந்த வகை உணவுகளையே அதிகம் தங்கள் உணவில் சேர்க்கின்றனர். அதிலும் ஹைப்பர்யூரிசிமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள பருப்பு வகைகளை உண்ணக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இதில் இருக்கும் புரோட்டீன் அளவு, உடலில் இருக்கும் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகரித்துவிடும்.



பெரும்பாலானோர் இந்த பருப்புகளை தங்கள் வீடுகளில் வேக வைத்தோ அல்லது வறுத்தோ தான் சாப்பிடுவார்கள். அவ்வாறு வறுக்கும் போது அதில் சிறிது எண்ணெய் விட்டு வறுப்பதால், உடலுக்கு தேவையான அளவு மட்டும் புரோட்டீன் அளவு கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே இவ்வாறு சாப்பிடுவது ஒரு வகையில் உடலுக்குப் பாதுகாப்பானது தான். ஆகவே பருப்புகள் மற்றும் பீன்ஸ் வகைகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நல்லது.

பால் மற்றும் பாலால் ஆன பொருட்கள்

பால் மற்றும் பாலால் ஆன பொருட்களான சீஸ், பன்னீர், தயிர் போன்ற அனைத்திலுமே, அதிகமான அளவு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் ஒரு கப் பாலில் 8 கிராம் புரோட்டீனும், சீஸ்-இல் 6-10 கிராமும், பன்னீரில் 30 கிராமும் மற்றும் தயிரில் 8-12 கிராமும் நிறைந்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்கள் பாலால் செய்யப்படும் பொருட்களை வைத்தே தயாரிக்கக்படுகிறது. தற்போது சாண்விட்ச், பர்க்கர் போன்ற அனைத்து வகையான உணவுகளிலுமே சீஸ் இல்லாமல் இருக்காது. அதிலும் இன்றைய அவசரக் உலகில் வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் காலை உணவு என்னவென்று பார்த்தால், கண்டிப்பாக சீஸ் சேர்த்த சாண்விட்ச் ஆகத் தான் இருக்கும்.



அதுமட்டுமல்லாமல் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்துவிட்டு தூங்கினால், தூக்கம் வரவில்லை என்று அவஸ்தைபடுபவர்களுக்கு நல்ல தூக்கம் வரும். மேலும் இந்த பால் உணவுப்பொருட்களை உணவில் சேர்த்தால், ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கும்.

சோயா பொருட்கள்

சோயா உணவுப் பொருட்களான சோயா பால் மற்றும் டோஃபு ஆகியவற்றிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. ஒரு கப் சோயா பாலில் 8 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. இந்த பாலை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். டோஃபு என்பது மற்றொரு வகையான சோயாவால் செய்யப்படும் ஒரு உணவுப் பொருள். இது தற்போதைய சூப்பர் மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது. இது பார்க்க சீஸ் போன்று தான் இருக்கும். ஆனால் சாராதணமான சீஸில் கிடைக்கும் புரோட்டீனின் அளவை விட, அந்த டோஃபுவில் கிடைக்கும் கரோட்டீனின் அளவு மிகவும் அதிகம். சொல்லப்போனால் ஒரு கப் டோஃபுவில் 40 கிராம் புரோட்டீன் உடலுக்கு கிடைக்கும்.



அதிலும் எப்படி அசைவ உணவுகளான மீன், முட்டை போன்றவற்றில் கிடைக்கும் அதிகமான புரோட்டீன், சைவ உணவுகளில் இந்த டோஃபுவிலேயே கிடைக்கிறது. ஆகவே இந்த அளவு புரோட்டீனை தினமும் உணவில் சிறிது உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நல்ல வலுவுடன் இருக்கும்.

நட்ஸ்

நட்ஸ் வகையைச் சேர்ந்த பாதாம், வேர் கடலை மற்றும் முந்திரி ஆகியவைற்றை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட அவற்றில் அதிக அளவில் புரோட்டீன் சத்தானது நிறைந்துள்ளது. அதிலும் அவற்றில் குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்துக்கள் உள்ளன. ஒரு கப் பாதாமில் 32 கிராம் புரோட்டீனும், வேர் கடலையில் 36 கிராம் புரோட்டீனும் மற்றும் முந்திரியில் 20 கிராம் புரோட்டீனும் நிறைந்துள்ளது. அதிலும் இந்த உணவுப் பொருட்கள் ஒரு சிறந்த மாலை நேரத்தில் சாப்பிடக் கூடிய வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ்.



சிலர் இந்த பாதாமை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குண்டாக வேண்டும் என்று நினைத்து சாப்பிடுவார்கள். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் உடல் ஸ்லிம் தான் ஆகும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே டயட் மேற்கொள்ள நினைப்பவர்கள், பாதாமை சாப்பிடுவது நல்லது. ஆனால் முந்திரியை எடுத்துக் கொண்டால், அதில் அதிகமான அளவு உடல் எடையை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உடல் எடையை அதிகமாக்க நினைப்பவர்கள் இதனை தினமும் சாப்பிட்டால் குண்டாகலாம். ஆகவே இத்தகைய நலன்களையெல்லம் கொண்ட நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.