Tuesday, 15 January 2013

அல்லிப்பூவின் மருத்துவ குணங்கள்

நீரிழிவை நீக்கும். புண்களை ஆற்றும். வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம்.

கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் உண்டாகும்.இதற்கு அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரிது பூசினால் கட்டி உடைந்து குணமாகும்.

அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப் பூச அக்கி கொப்புளம் தீரும்.

அல்லி இதழ்களை நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக்கி பாலுடன் கலந்து பருகி வர நாவறட்சி,தீராத தாகம்,சிறுநீர் எரிச்சல் குணமாகும்

அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும்

அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மில்லி நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்

கண்சிவப்பு,எரிச்சல்,நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரைத்து கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும்

அல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.

அவுரி இலைச் சாறு,மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மில்லி அளவு எடுத்து 500 மில்லி தேங்காய் எண்ணையில் கலந்து ,அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும்,35 கிராம் தான்றிக் காயும் அரைத்து கலந்து காய்ச்சி பதமுடன் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும்.முடி கருத்து தழைத்து வளரும்.அத்துடன் பித்தம் தணியும்.

சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வர இதயம் பலமடையும்.இதய படபடப்பு நீங்கும். இரத்தம் பெருகும்

அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும்.நீரிழிவு நோய் தீரும்.ஆண்மை பெருகும்.

வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராக சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மில்லி அளவு எடுத்து அதை 100 மில்லி பசும் பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உஷ்ணம் தணியும்

ரத்தக் கொதிப்பும்,நீரிழிவு நோயும் கட்டுப்படும்.வெள்ளை நோய் ,மேகவெட்டை குணமாகும்.உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்.

No comments:

Post a Comment