* இறைவனை எஜமானாகப் பாவித்து, மனம் சுளிக்காமல், சேவை செய்வதில் அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.
* எங்கும் பரந்து நிறைந்துள்ள இறைவன் ஆலயங்களில் உள்ள திருவுருவத்தில் வெளிப்பட்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
* நாவின் சுவைக்கு அடிமையாகி, நல்லுணவு எங்கே என்று தேடி ஏங்காதீர்கள்.இறைவனருளால் கிடைத்ததை உண்டு திருப்தியடையுங்கள்.
* இறைவனை எளிதாகக் கிடைக்கக் கூடிய பூவினாலும், நீரினாலும் வழிபட்டாலே போதும். வழிபாட்டிற்கு பக்தியும், ஒழுக்கமும் இரண்டு கண்கள் போன்றவை.
* உலக இன்பங்களை மறந்தால் இறைவன் நம்மிடம் தோன்றுவார். இறைவனை பற்றிய சிந்தனை மறைந்தால் உலக இன்பம் பெரிதாகத் தோன்றும்.
* தர்மத்தினால் தான் வாழ்க்கையில் நற்கதியடைய முடியும். தர்மம் இறைவனுடைய மூத்த குமாரனாகும்.
* தேங்காய் உள்ளே பரிசுத்தமாக இருப்பது போல், மனதையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.
- வாரியார்
No comments:
Post a Comment