மனிதன் விஞ்ஞானத்தில் பெரும் வெற்றியைப்
பெற்றிருக்கிறான். உலகத்தின் எல்லையை விட்டு சந்திர மண்டலம், செவ்வாய் கிரகம் என
அவன் சாதித்தவை அனைத்தும் மிக மிக பாராட்டுக்குரியவை. தனது அறிவைப் பயன்படுத்தி
அவன் இதைச் சாதித்திருக் கிறான். ஆனால், இந்த சாதனைக்காக அவன் தன்னைத்தானே
பாராட்டிக் கொள்வதையும், கடவுளை வென்று விட்டதாக கூறுவதையும் ஒப்புக்கொள்ள
முடியாது. காரணம், வெறும் குதிரையும், யானையும் படைகளாக இருந்த காலத்தில் அவற்றை
அடக்க பீரங்கியைக் கண்டுபிடித்தான். பீரங்கியை அடக்க வெடிகுண்டுகளை தயாரித்தான்.
சாதாரண குண்டுகளைத் தகர்க்க அணுகுண்டை கொண்டு வந்தான். காட்டையும் ஆற்றையும்
விளைநிலங்களையும் அழித்து செயற்கை உணவு வகைகளை அவன் தயாரித்ததும், நோய்கள்
கடுமையாகத் தாக்கின. ஆக, மனித அறிவு கடைசியில் அழிவைத் தான் தந்தது. மெய்ஞ்ஞானம்
அப்படியல்ல! அது அன்பைப் போதிக்கிறது. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது
நமக்கு அளித்துள்ளதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வினை உண்டாக்குகிறது.
அக்கால மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். அதனால் அவர்களுக்கு பிரச்னைகள்
மிகக்குறைவாக இருந்தது. எனவே, மெய்ஞ்ஞானத்தை விஞ்ஞானம் வென்றுவிட்டதாகக் கூறுவதை
எக்காலமும் ஏற்கமுடியாது
இனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். "நாவலன் தீவு" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை "நாவலன் தீவு" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment