Tuesday, 24 April 2012

பாலியல் கல்வி பற்றி பேசுங்கள் பெற்றோர்களே..!!!!


பதின் பருவ குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியமா என்பது இன்றைக்கு பெரிய கேள்வியாக உள்ளது. இன்றைக்கு ஊடகங்களில் காட்டப்படும் அறைகுறை காட்சிகளையும், இணைய தளங்களில் கண்டதையும் பார்த்து விட்டு தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பாலியல் கல்வி அவசியம்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

பள்ளிப் பாடப்புத்தகங்களில் மற்ற உறுப்புகளைப்பற்றி எந்தளவுக்கு பாடங்களில் இருக்கிறதோ அதைப்போலவே பிறப்புறுப்புகள் பற்றிய பாடங்களும் அவசியம். 

பிறப்புறுப்புகளைப்பற்றிய புரிதல்கள் அவற்றை தூய்மையாக பராமரித்தல் ஆகியவை 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவசியம். உறவுக்காலங்களில் பிறப்புறுப்புக்களின் பயன்பாடுகள் ,கருத்தரித்தல்,குழந்தை பிறப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை பற்றி 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பதின் பருவ குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியின் அவசியத்தை கற்பிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் விடலை பருவத்தில் குழந்தைகளுக்கு ஒருவித ஆர்வமும், தெரிந்து கொள்ள நினைக்கும் அவர்களை தவறான பாதைக்கும் இட்டுச்செல்லும். இவற்றை தடுக்க பெற்றோரே இது பற்றி பேசுவது முக்கியமாகும்.

உங்கள் குழந்தைகள் பாலியல் பற்றியோ, பல்வினை நோய்கள் பற்றியோ கெட்டால், அறிவியல் அளவில் தயங்காமல் விடைஅளிக்கவும். ஆண், பெண் இருவரிடமும் மாதவிலக்கு, STD, போன்றவற்றை பற்றி பேசவும். வேறு ஏதேனும் பேசும் போது சகஜமாக இது பற்றி பேசலாம் தவறேதும் இல்லை. குழந்தைகளுக்கு விருப்பம் இல்லையெனில் விட்டுவிடுங்கள். அவர்களுக்கு இது சரியான தருணமாக இல்லாமல் இருக்கலாம். அதேபோல் உங்களுக்கு அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க தயக்கம் இருப்பின் வெளிப்படையாக கூறவும். புத்தகங்கள் எடுத்து வந்து தரவும்.

கலசாரத்தையும் கல்வியறிவையும் சேர்த்து குழப்ப வேண்டாம். குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் சந்தேகத்தை கேட்டால், வாயை மூடு, தெரியும் போது தெரிந்து கொல்ளலாம் என் கூறவேண்டாம். காலம் மாறிக்கொண்டே வருகிறது. கொண்டு வருகின்ற புத்தகங்கள், விளக்க படங்கள் இவற்றை நீங்கள் முதலில் பார்க்க வேண்டியது அவசியம். உங்களைவிட உங்கள் குழந்தை பாலியல் முதிர்ச்சி சற்றே விரைவாக அடைவதை புரிந்துகொள்ளுங்கள்.

பாலியல் கல்வி பற்றி தந்தை தன் பிள்ளையிடமோ, தாய் தன் மகளுடனோ பேசுவது அவசியம்.குழந்தைகளும் அவர்களின் நண்பர்களும் பேசிக்கொள்வதை கேட்க நேர்ந்தால் உடனியாக அவர்களை சத்தம் போட்டு கோபிக்க வேண்டாம். படங்களுடன் கூடிய கையேடுகளை கொண்டுவந்து படிக்க தாருங்கள். உங்களுடைய நூலகம், பொதுநலத்துறையில் இதற்கான படங்களும் கிடக்கும்.

வீட்டில் பதின் பருவ ஆண்குழந்தை இருந்தால் அவர்களிடம் தந்தை சில கேள்விகளை கேட்டு தானாகவே வ ரும் விறைப்புத்தன்மை விந்தணு திரவம் (semen) வெளியேறுதல், சுய இன்பம், போன்றைகளை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதேபோல் தாய் தன் மகளிடம் மாதவிலக்கு, சரியான தூய்மை செய்து கொள்ளும் முறை, அதன் பயமும் உடல் பலவீனமும், மார்பக வளர்ச்சி, கருத்தரிக்கும் முறை போன்ற விசயங்களை பேசி புரியவைக்கலாம்.

எல்லவற்றுக்கும் மேலாக நம் அனுமதியின்றி யாரும் பாலியல் உறவில் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும். இது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

No comments:

Post a Comment